தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வள்ளியூர்-ஆரல்வாய்மொழி இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்! - திருநெல்வேலி-திருவனந்தபுரம் ரயில்

வள்ளியூர்-ஆரல்வாய்மொழி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை இணைப்புப் பணிகள் நடைபெறுவதால் அவ்வழியாக செல்லும் ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக இன்று (ஏப்.19) தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தெற்கு ரயில்வே
தெற்கு ரயில்வே

By

Published : Apr 19, 2022, 10:02 PM IST

மதுரை: வள்ளியூர்-ஆரல்வாய்மொழி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு வேலைகள் நடைபெறுதால் அவ்வழியாக செல்லும் ரயில் வழித்தடங்களில் சில மாற்றங்களை செய்து இன்று (ஏப்.19) தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், 'திருநெல்வேலி - நாகர்கோவில் பிரிவில் வள்ளியூர் - ஆரல்வாய்மொழி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு வேலைகள் நடைபெற இருக்கின்றன. எனவே, இந்தப் பகுதியில் ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி,

1) திருச்சி-திருவனந்தபுரம்-திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயில் (22627/22628) ஏப்ரல் 20 முதல் ஏப். 29 வரை திருநெல்வேலி-திருவனந்தபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

2) ஏப்.20 முதல் ஏப்.28 வரை தாம்பரத்திலிருந்து இரவு 11.00 மணிக்கு புறப்பட வேண்டிய தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் (20691) திருநெல்வேலி - நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் ஏப்ரல் 21 முதல் ஏப்.29 வரை நாகர்கோவிலில் இருந்து மாலை 03.50 மணிக்குப் புறப்பட வேண்டிய நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் (20692) நாகர்கோவில் - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

3) ஏப்.24 அன்று புதுச்சேரியிலிருந்து மதியம் 12.00 மணிக்கு புறப்பட வேண்டிய புதுச்சேரி-கன்னியாகுமரி விரைவு ரயில் (16861) மற்றும் ஏப்.25 அன்று கன்னியாகுமரியிலிந்து மதியம் 01.50 மணிக்கு புறப்பட வேண்டிய கன்னியாகுமரி-புதுச்சேரி விரைவு ரயில் (16862) ஆகியவை திருநெல்வேலி - கன்னியாகுமரி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

4) ஏப்.28 அன்று சென்னையில் இருந்து மாலை 06.55 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர்-நாகர்கோவில் வாராந்திர விரைவு ரயில் (12667) மற்றும் ஏப்.29 அன்று நாகர்கோவிலில் இருந்து மாலை 04.15 மணிக்கு புறப்பட வேண்டிய நாகர்கோவில்-சென்னை எழும்பூர் வாராந்திர விரைவு ரயில் ஆகியவை திருநெல்வேலி-நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

5) ஏப்.29 அன்று கன்னியாகுமரி-சென்னை எழும்பூர் விரைவு ரயில் (12634) கன்னியாகுமரியில் இருந்து 45 நிமிடங்கள் காலதாமதமாக மாலை 05.50 மணிக்கு புறப்படும்' என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: மூத்த குடிமகன்களுக்கான ரயில் கட்டண சலுகை நிராகரிப்பு; - சு.வெங்கடேசன் எம்பி

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details