மதுரை:ரயில்வே வாரியம் நேற்று (ஏப். 1) வெளியிட்டுள்ள உத்தரவில்,தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் பி.ஜி மல்லையாவுக்கு, பொது மேலாளருக்கு நிகரான நிர்வாகம் மற்றும் நிதி அதிகாரங்கள் வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவு நேற்று (ஏப். 1) முதல் அமலுக்கு வந்தது.
இதையடுத்து, நேற்று காலை அவர் கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். இவர் 1985ஆம் ஆண்டு இந்திய ரயில்வே மின்சார பொறியியல் பிரிவைச் சார்ந்தவர். இவர் மதுரையில் முதுநிலை கோட்ட மின்சார பொறியாளராகவும் பணியாற்றியுள்ளார்.
தெற்கு ரயில்வே, தென் கிழக்கு மத்திய ரயில்வே, தென் மத்திய ரயில்வே, கிழக்கு ரயில்வே, தென்மேற்கு ரயில்வே, ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை, பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் ஆகியவற்றில் இவர் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
நெதர்லாந்து, ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ், தென் கொரியா, சீனா, ஈரான், சுவிட்சர்லாந்து, வங்காளதேசம் ஆகிய வெளிநாடுகளில் ரயில் இயக்கம் பற்றி பயிற்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வு: எவ்வளவு அதிகம்...? என்னென்ன மாற்றம்...?