மதுரை விமான நிலையத்தில் நடிகர் சங்க துணைத்தலைவர் உதயா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், “நடிகர் சங்கத் தேர்தல் குறித்து ஏற்கனவே நீதிமன்றத்தில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, மறு விசாரணை 24ஆம் தேதி நீதிமன்றத்தில் விவாதத்துக்கு வருகிறது.
விரைவில் நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள்! உதயா பேட்டி - nadigar sangam election results
மதுரை: விரைவில் நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் வருமென, விமான நிலையத்தில் நடிகர் சங்க துணைத் தலைவர் உதயா பேட்டியளித்துள்ளார்.
ஐசரி கணேசன் தலைமையில் இருக்கும் எங்களது சங்கரதாஸ் ஸ்வாமிகள் அணிக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது. தனிப்பட்ட முறையில் ஐசரி கணேசன் எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் தீபாவளிக்குப் புத்தாடைகள் உள்ளிட்ட சலுகைகளை, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உறுப்பினர்களுக்கு வழங்கி வருகின்றார்.
இது தேர்தலைக் கருத்தில் கொண்டு வழங்கப்படுவது அல்ல. எதிரணி என்ன சொன்னாலும் அதைப் பொருட்படுத்தாமல் ஐசரி கணேசன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். விரைவில் ஐசரி கணேசன் தலைமையில், நடிகர் பாக்கியராஜ் தலைவராக பொறுப்பேற்பார்” என்று கூறினார்.