கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 15) இந்திய-சீன எல்லையான கிழக்கு லடாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனியும் ஒருவர்.
தற்போது (ஜூன் 17, இரவு 11.30 மணி) இவரின் உடல் சிறப்பு ராணுவ விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு எடுத்துவரப்பட்டுள்ளது. அங்கு அவரின் உடலுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மதுரை விமான நிலைய ஆணையர் செந்தில்வளவன், மதுரை மாநகரக் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன், டிஐஜி ஆனி விஜயா, மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மதுரை வந்தடைந்த ராணுவ வீரர் பழனியின் உடல் இதையடுத்து பழனியின் உடல் அவரது சொந்த ஊரான கடுக்கலூருக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. ராணுவ மரியாதையுடன் ராணுவ வீரர் பழனியின் உடல் ஜூன் 18ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இதையும் படிங்க:ஆசையாகக் கட்டிய வீட்டை பார்க்க முடியாமல் நாட்டிற்காக உயிர்நீத்த பழனி; கதறும் குடும்பம்