தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்றவர் கைது - smuggling at airport

மதுரையிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்றவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

smuggling drugs at madurai airport
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்றவர் கைது

By

Published : Jan 10, 2022, 12:14 PM IST

மதுரை: மதுரையிலிருந்து இலங்கைக்கு செல்லவிருந்த ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் மூலம் போதைப் பொருள்கள் கடத்த உள்ளதாக போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் மதுரை விமான நிலையத்தில் இலங்கைப் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த ஷகில் அஹமது (28) என்பவரின் உடைமைகளை சோதனையிட்டதில், அவர் வைத்திருந்த பழைய மண்ணெண்ணெய் அடுப்பில் விலை உயர்ந்த போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது.

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்றவர் கைது

இதனையடுத்து அவரை போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:லஞ்சம் வாங்கிய அலுவலர் - வைரலாகும் வீடியோ

ABOUT THE AUTHOR

...view details