தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சாலையில் மாடு குறுக்கே வந்ததால், ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்து! - மதுரை மாவட்டம் விரகனூர் சுற்றுச்சாலை

மதுரை: சாலையில் மாடு குறுக்கே வந்ததால் ஷேர் ஆட்டோ கட்டுப்பாட்டையிழந்து, கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Madurai share auto accident

By

Published : Sep 26, 2019, 8:21 PM IST

மதுரை மாவட்டம் விரகனூர் சுற்றுச்சாலை அருகேயுள்ள சிலைமான் செல்லும் சாலையில், ஷேர் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தபோது மாடு குறுக்கே வந்ததால், ஷேர் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் குறுக்கே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ஆட்டோவில் இருந்த மூன்று பேரும் படுகாயமடைந்தனர். மேலும் சாலையில் நடந்துசென்றுக் கொண்டிருந்த ஒருவரின்மீது ஆட்டோ மோதியதில், தலையில் அடிபட்டு அவர் படுகாயமடைந்தார்.

Share auto met with accident

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்து, காயமடைந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details