தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதுரை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் மீதான பாலியல் வழக்கு ரத்து

மதுரை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் மீது பதியப்பட்ட பாலியல் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

madurai hc
madurai hc

By

Published : Apr 12, 2022, 4:50 PM IST

மதுரை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் முருகன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "மதுரை மாநகராட்சி துப்புரவு பிரிவில் பணிபுரியும் ஹெலன் மேரி, எஸ்எஸ் காலனி போலீசாரிடம் என் மீது பாலியல் தொந்தரவு புகார் அளித்தார்.

அதுதொடர்பான விசாரணையில், ஹெலன் மேரி பொய்யாக புகார் அளித்தது தெரியவந்ததால் வழக்கு முடிந்தது. ஆனால், நான் மீண்டும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மற்றொரு புகார் அளித்தார். அதனடிப்படையில் எஸ்எஸ் காலனி காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஆகவே, இந்த பொய்யான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று (ஏப். 12) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இதில் புகாரின் முக்கிய ஆதரமான செல்போன் உறையாடலை ஆய்வு செய்து பார்த்ததில், பாலியல் தொந்தரவு கொடுத்தற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்பது தெரியவருகிறது. ஆகவே முருகன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட 2ஆவது மனைவி தொடுத்த வழக்கு: கணவரின் பணப்பலன்களை வழங்க நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details