தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திமுக எம்பி ஆ.ராசாவை கடுமையாக சாடிய செல்லூர் ராஜூ - admk meeting at south car street

இந்துகள் குறித்த ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கண்டனம் தெரிவித்துள்ளார்.

Etv Bharatதிமுக எம்பி ஆ ராசாவை கடுமையாக சாடிய செல்லூர் ராஜு
Etv Bharatதிமுக எம்பி ஆ ராசாவை கடுமையாக சாடிய செல்லூர் ராஜு

By

Published : Sep 24, 2022, 9:17 PM IST

மதுரை:முன்னாள் முதலமைச்சர்அண்ணாவின் 114ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை தெற்கு மாசி வீதி T.M. கோர்ட் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய செல்லூர் ராஜூ, "ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு சொட்டு மது கூட இருக்காது என்று ஸ்டாலின் சொன்னார்.

ஆனால் இப்போது தமிழ்நாடு போதை மாநிலமாக மாறிவிட்டது. அன்றைக்கு எதிர்க்கட்சியாக இருந்த மு.க. ஸ்டாலின் ஜோசியத்தை பார்த்து அதிமுக ஆட்சி 3 மாத காலங்களில் கவிழ்ந்து விடும் என்று கூறினார். திமுக ஆட்சியில் விடியல் தருகிறேன் என்று கூறி இருட்டை கொடுத்துவிட்டார். நமக்கு விடியவே இல்லை.

சட்டை கிழித்துகொண்டு போனால் ஒட்டு போட்டு தைப்பார்கள். அதுபோலவே மதுரைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரும் போது சாலை அமைக்காமல் சாலையின் மேல் Batch Road போட்டார்கள். தமிழ்நாட்டிற்கே நிதி கொடுக்கும் நிதியமைச்சர் மதுரைக்கு மட்டும் நிதி கொடுப்பதில்லை. திமுக திராவிட மாடல் ஆட்சி என்கிறார்கள். மின்சாரம் கொடுக்க வக்கில்லை. மின்சார கட்டணத்தை உயர்த்திய வெட்கமுமில்லை.

அதிமுக ஆட்சியில் ஆவின் பாலில் ஈ கிடந்திருந்தால் வானத்திற்கும், பூமிக்கும் திமுகவினர் குதித்திருப்பார்கள், பெற்றை தாயை இழிவாக பேசிய ஆ.ராசாவை மதிக்கலாமா..? குங்குமம் வைத்தவர்கள் விபச்சாரியின் பிள்ளைகள் என்று ஆ.ராசா கூறுகிறார், ஏழைகளின் வரிப்பணத்தை பெற்றுக்கொண்டு ஆண்டிமுத்து ராசா ஆ. ராசாவாக மாறிவிட்டால். என்னவெல்லாம் பேசலாமா எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:திமுகவில் இணைகிறாரா நயினார் நாகேந்திரன்? ; நெல்லை அரசியலில் பரபரப்பு..

ABOUT THE AUTHOR

...view details