தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 18, 2020, 8:15 PM IST

ETV Bharat / city

'திமுக தலைவரின் மனைவியே அதிமுகவுக்கு தான் ஓட்டு போடுவாங்க' - அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மனைவி அதிமுகவிற்கு தான் ஓட்டு போடுவார் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

அம்மா மினி கிளினிக் சேவை தொடக்கம்
அம்மா மினி கிளினிக் சேவை தொடக்கம்

மதுரை மாவட்டம் துவரிமான் கிராமத்தில் அம்மா மினி கிளினிக் சேவையை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது, "நல்லவர்கள் ஆட்சி செய்தால் மழை மும்மாரி பெய்யும் என கூறுவார்கள், அதற்கு சான்றாக தற்போது மழை பெய்து வருகிறது. அதிமுக ஆட்சியில் பெண்களின் உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளன. பெண்கள் உயர வேண்டும் என நினைத்தவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா.

20 ஆண்டுகள் திமுக ஆட்சியில் பெண்களுக்கு எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. திமுக வேசம் போடும் கட்சி. மு.க. ஸ்டாலினுக்கு முடியை மட்டும் தான் நட தெரியும். வயலில் பயிரை நட தெரியாது. ஏசி அறையில் இருந்து கொண்டே எல்லோரும் முதலமைச்சராக வேண்டும் எனக் கூறி வருகிறார்கள். நடிகர்கள் புற்றீசல் போல் வந்துள்ளனர். சினிமாவில் மட்டும் தான் உடனடியாக முதலமைச்சராக முடியும்" என்றார்.

அம்மா மினி கிளினிக் சேவை தொடக்கம்

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்ததாவது, "கமலை கட்சித் தலைவராக மக்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் பேசுவது அவருக்கும் புரிய வில்லை, மக்களுக்கும் புரிய வில்லை. அதிமுகவிற்கு பெண்கள் வாக்கு அதிகம். எதிர்க்கட்சித் தலைவரின் மனைவியே அதிமுகவிற்கு தான் ஓட்டு போடுவார்.

அம்மா மினி கிளினிக் சேவை தொடக்கம்

நடிகர் என்றால் கூட்டம் கூடத்தான் செய்யும். நடிகர்களை காட்சி பொருளாக மட்டுமே மக்கள் பார்ப்பார்கள். கூட்டணிக் கட்சிகள் எங்களுடைய நண்பர்கள். தேமுதிக கூட்டணியில் சீட்டு ஒதுக்கீடு குறித்து தேர்தல் வரும்போது தெரிவிப்போம். தன்னை எம்ஜிஆர் என கூறும் கமல் அதிமுகவில் வந்து சேர்ந்திருக்க வேண்டும்" என்றார்.

அம்மா மினி கிளினிக் சேவை தொடக்கம்

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி: 'முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார்' - வெல்லமண்டி நடராஜன்

ABOUT THE AUTHOR

...view details