மதுரை: பால் பண்ணை சந்திப்பு அருகே பிரபல பன் பரோட்டா கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வருகை தந்து பரோட்டா சாப்பிடுவது வழக்கம். இந்த நிலையில், இந்த கடையில் சுகாதாரமற்ற முறையில் பரோட்டா, உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன.
மதுரையில் பிரபல பரோட்டா கடைக்கு சீல் - பரோட்டா
மதுரையில் பிரபல பன் பரோட்டா கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
மதுரையின் பிரபல பன் பரோட்டா கடைக்கு சீல்
இந்த புகார்களின் அடிப்படையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று (ஜூன் 25) கடையில் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் தரமற்ற முறையில் பரோட்டா தாயார் செய்து விற்பனை செய்துவருவது தெரியவந்தது. இதனால், கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:முர்மூ மீதான சர்சை ட்வீட்- பாலிவுட் திரைப்பட இயக்குநர் மீது வழக்கு தொடர்ந்தார் தெலங்கானா பாஜக தலைவர்