தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் வேண்டும் - எஸ்.டி.பி.ஐ வலியுறுத்தல் - Sdpi members protested against CAA, NRC, NPR

மதுரை: சிம்மக்கல் அண்ணா சிலை அருகே எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் உள்ளிட்டவற்றை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Sdpi members protest
Sdpi members protest

By

Published : Feb 14, 2020, 9:28 PM IST

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் உள்ளிட்டவற்றை எதிர்த்து நாடு முழுவதிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இதனிடையே மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கண்டன முழக்கமிட்டனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.டி.பி‌.ஐ கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் முஜிபுர் ரகுமான், தமிழ்நாட்டில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகிய சட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என்று தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் தற்போது தொடங்கியுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் மேற்கூறிய சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். மேற்கு வங்காளம், கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், புதுச்சேரி போன்ற மாநிலங்களின் சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்பதை இந்த போராட்டத்தில் வாயிலாக கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க:மருத்துவர்களையும் விட்டு வைக்காத கொரோனா - ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details