தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

எஸ்சி/எஸ்டி மாணவர்களுக்கான திட்டங்கள் குறித்து விளக்க தனி இணையதளம் - தமிழ்நாடு அரசு! - எஸ்சிஎஸ்டி மாணவர்களுக்கான திட்டங்கள் குறித்து விளக்க தனி இணையதளம் உருவாக்கப்படவுள்ளது

எஸ்சி/எஸ்டி மாணவர்களின் உயர்கல்விக்காக அரசு ஒதுக்கியிருந்த 927 கோடி ரூபாயை மீண்டும் அத்துறை மாணவர்களின் உயர்கல்விக்காகவும், நலத் திட்டங்களுக்காகவும் செலவிட கோரிய வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை
மதுரை

By

Published : Jun 14, 2022, 6:39 AM IST

மதுரை: மதுரையை சேர்ந்த கார்த்திக் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் பலருக்கும் உயர்கல்வி பெறுவதற்கான பொருளாதார தேவை, முழுமையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை. அவர்களின் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை பயன்படுத்தப்படாமல் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அத்துறையிடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, கடந்த 8 ஆண்டுகளில், வெளிநாடுகளில் பி.எச்டி., படிப்பதற்கான உதவித் தொகை திட்டத்திற்கு 18 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 3 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு 2 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையில், 99 லட்ச ரூபாய் அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்டங்களுக்காக ஒதுக்கிய தொகையில் மட்டும், 927 கோடி ரூபாய் பயன்படுத்தப்படாமல் அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே, இந்த தொகையை மீண்டும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் உயர்கல்விக்கு பயன்பெறும் வகையில் வழங்க உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள், பி.என்.பிரகாஷ், ஆனந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, "ஆதிதிராவிடர்களுக்கான திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் தனி இணையதளம் உருவாக்கப்பட உள்ளது. பள்ளிகளிலும், நாளிதழ்களிலும் அவை தொடர்பான செய்தி வெளியிடப்படுகிறது" என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தனி இணையதளத்தை உருவாக்கும் பணியை விரைவாக மேற்கொள்ள அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: சென்னை வன அலுவலர்கள் இடமாற்றம் - வனத்துறை தலைமைச்செயலாளர் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details