மதுரை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த செல்வராணி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை-மகன்களான ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் காவல் துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு உயிரிழந்தனர்.
இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை விசாரித்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மதுரை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த டிசம்பர் 10ஆம் தேதி வழக்கு விசாரணைக்காக குற்றவாளிகள் அனைவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உறவினரின் செல்போன் மூலமாக யாரிடமோ பேசி, ரூ.36 லட்சத்தை வழங்கி விடுமாறு மிரட்டிக் கொண்டிருந்தார்.