சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு, மதுரை சிறையில் உள்ள சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இருந்த தாமஸ் பிரான்சிஸ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பிணை வழங்கக்கோரி மனு தாக்கல்செய்திருந்தார். இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தது.
விசாரணையில், மனுதாரர் வழக்கறிஞர் கூறுகையில், தூத்துக்குடி அருகே உள்ள மெய்ஞானபுரத்தில் பிரான்சிஸ் சகோதரருக்கு திருமணம் நடைபெற உள்ளது. எனவே தாமஸ் பிரான்சிஸுக்கு இடைக்காலப் பிணை வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வாதிட்டார். அப்போது மத்திய அரசு வழக்கறிஞர், பதில் மனு தாக்கல்செய்ய அவகாசம் கோரினார்.