தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதிமுக கொடியுடன் காரில் வந்த சசிகலா மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் - மீனாட்சியம்மன் கோயிலில் சசிகலா சாமி தரிசனம்

அதிமுக கொடிக் கட்டிய காரில் வந்த சசிகலா மதுரை மீனாட்சியம்மன் கோயில், மதுரை வீரன் கோயிலில் தரிசனம் செய்தார்.

சசிகலா
சசிகலா

By

Published : May 7, 2022, 9:07 PM IST

Updated : May 7, 2022, 10:56 PM IST

மதுரை:தமிழ்நாட்டில் மாவட்டந்தோறும் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் சசிகலா, அந்தந்த மாவட்டங்களில் உள்ள மூத்த நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்று (மே 07) காலை திருச்செந்தூரில் இருந்து, சாலை மார்க்கமாக அதிமுக கொடி கட்டிய காரில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்த சசிகலா, சாமி தரிசனம் செய்தார்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகை தந்த சசிகலா
அவருக்கு அதிமுக, அமமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். இதைத்தொடர்ந்து மதுரை வீரன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதனிடையே பொதுமக்கள் சசிகலாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதைத் தொடர்ந்து காரில் இருந்தபடியே குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு சசிகலா சாக்லெட்டுகளை கொடுத்தார்.
Last Updated : May 7, 2022, 10:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details