தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வாடிப்பட்டி அருகே கண்மாயில் மணல் திருட்டு: இளைஞர் ஒருவர் கைது - மணல்

மதுரை: வாடிப்பட்டி அருகே கண்மாய் ஓடையில் அனுமதியின்றி டிராக்டரில் மணல் திருடிய இளைஞரைக் காவல் துறையினர் கைதுசெய்து, மணல் அள்ள பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல்செய்தனர்.

மணல் திருட்டு
மணல் திருட்டு

By

Published : Dec 8, 2020, 1:33 PM IST

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கொழிஞ்சிபட்டி பகுதியிலுள்ள கண்மாய் ஓடையில் அனுமதியின்றி மணல் திருட்டு நடைபெறுவதாக வாடிப்பட்டி காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

அத்தகவலின்பேரில் காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்து சென்றபோது திருட்டுத்தனமாக டிராக்டரில் சவுடு மண் அள்ளிக்கொண்டிருந்த பாண்டி (36) என்ற இளைஞர் கையும் களவுமாகப் பிடிப்பட்டார்.

அவரைக் கைதுசெய்த வாடிப்பட்டி காவல் துறையினர் கடத்தலுக்குப் பயன்படுத்திய டிராக்டரைப் பறிமுதல்செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details