தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திண்டுக்கல்லில் மணல் கொள்ளை: ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு - மணம் திருட்டு

பழனியில் மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல்லில் மணல் கொள்ளை
திண்டுக்கல்லில் மணல் கொள்ளை

By

Published : Sep 10, 2021, 8:17 AM IST

மதுரை:திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்தார்.

அதில், “பழனி அருகே கோடைகால நீர்த்தேக்கம் சுமார் 14 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியிலிருந்து வரும் மழைநீரை இந்த நீர்த்தேக்கத்தில் சேகரித்து, பழனி அதன் சுற்றுவட்டார கிராமங்களில் குடிநீர் வசதிக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

மணல் கொள்ளை

இதனால், சுமார் இரண்டு லட்சம் மக்கள் பயனடைந்துவருகிறார்கள். ஆனால் சில அரசியல் பிரமுகர்கள் இந்த நீர்த்தேக்கத்தில் சுமார் 20 அடி ஆழத்திற்குச் சட்டவிரோதமாக மணல் அள்ளிவருகின்றனர்.

இதனால் நிலத்தடி நீர் மிகவும் பாதிப்படைகிறது. இந்த மணல் கொள்ளையில் ஈடுபடும் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர் அலுவலர்களுக்குப் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆட்சியருக்கு உத்தரவு

மேலும், அரசு அலுவலர்களும் இந்த மணல் கொள்ளைக்கு துணையாக உள்ளார்கள். எனவே சட்டவிரோத மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்குத் துணைபோகும் அரசு அலுவலர்கள் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் மணல் திருட்டு - கமல்ஹாசன் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details