தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'மணல் கடத்தலைத் தடுக்க எத்தனை உத்தரவுகள் போட்டாலும் மதிப்பதில்லை' - நீதிபதிகள் வேதனை - நீதிபதிகள் வேதனை

மதுரை: சட்டவிரோதமாக மணல் கடத்தலைத் தடுக்க கோரிய வழக்கில், எத்தனை உத்தரவுகள் போட்டாலும் அலுவலர்கள் மதிப்பதில்லை என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

nMDU
nMDU

By

Published : Sep 9, 2020, 2:59 PM IST

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுக்கா தெற்கு கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த சிவசங்கரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அதில், “எங்கள் பகுதியில் அதிகளவில் விவசாயம் செய்துவருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள ஓடை தடுப்பணை உள்ளது. இந்த வழியாகச் செல்லும் ஓடை நீர் ஐந்து கிலோ மீட்டர் தூரம் உள்ள தாமிரபரணி ஆற்றில் சென்று கலக்கும் வண்டல் ஓடை தடுப்பணை மூலம் நீர் ஆதாரம், குடிநீர் ஆதாரம், நிலத்தடி நீர் அதிகரிக்க காரணமாக உள்ளது. இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த மேனுவல் ஜார்ஜ் என்பவர் எங்கள் பகுதியில் எம் சாண்ட் குவாரி அமைப்பதற்காக அனுமதி பெற்றுள்ளார். அவர் இதன்மூலம் கடினமான பாறைகளை எடுத்து அதனை உடைத்து எம்.சாண்ட் உற்பத்தி செய்வதற்கு மட்டுமே அனுமதி பெற்றுள்ளார்.

ஆனால் அவர் எங்கள் பகுதியில் உள்ள அலுவலர்கள், அரசியல்வாதிகளின் துணையோடு சட்டவிரோதமாக மணலை அளவுக்கு அதிகமாக அள்ளி விற்று வருகிறார். இவர் தினமும் இரவு நேரங்களில் 200 முதல் 300 லாரிகள் வரை மண்ணை கடத்தி விற்பனை செய்து வருகிறார். இதனால் எங்கள் பகுதியில் நீர் ஆதாரம், விவசாயம் இரண்டிற்கும் அபாயம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை ஆய்வு செய்வதற்காக, ஒரு வழக்குரைஞர் ஆணையரை நியமித்து இப்பகுதியில் மணல் கடத்துவது குறித்து ஆய்வு செய்து இதை தடுக்க உத்தரவிட வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “மணல் கடத்தலைத் தடுக்க நீதிமன்றம் எத்தனை உத்தரவுகள் போட்டாலும், அதை அரசு அலுவலர்கள் மதிப்பதில்லை என்றும் மணல் கடத்தல் என்பது காவல் துறையினருக்கு தெரியாமல் நடப்பதில்லை.

இந்த வழக்கு குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் காணொலி வாயிலாக ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறி வழக்கு விசாரணையை செப்டம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details