மதுரை ராஜாஜி பூங்காவிற்கு வரும் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்து வரும் நிகழ்வு மதுரை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கஞ்சாவில் கல்லா கட்டியவரை கையும் களவுமாக பிடித்த காவல்துறை! - கஞ்சா
மதுரை: மதுரை ராஜாஜி பூங்காவில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த ராஜா என்பவரை மஃப்டியில் சென்று கைது செய்த தல்லாக்குளம் போலீசார்.
மதுரை ராஜாஜி பூங்கா அருகே இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர். இந்நிலையில், திடீரென தல்லாகுளம் காவல்துறையினர் ராஜாஜி பூங்காவில் மாற்று உடையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, உசிலம்பட்டியை சேர்ந்த ராஜா என்பவர் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வந்ததை காவல் துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். அதை தொடர்ந்து ராஜாவிடமிருந்து ஒன்றரை கிலோ மதிப்புள்ள கஞ்சா மற்றும் 2000 பணத்தை பறிமுதல் செய்ததோடு ராஜாவை கைது செய்த காவல்துறையினர், காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.