தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா பணியில் ஈடுபட்டதற்கு ஊதியம் வழங்கவில்லை: இளைஞர்கள் போராட்டம்! - மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை மாநகராட்சியில், கரோனா பணியில் ஈடுபட்ட 300 பேருக்கு, ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, அப்பணியில் ஈடுபட்ட இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாநகராட்சியில் இளைஞர்கள் போராட்டம்
மதுரை மாநகராட்சியில் இளைஞர்கள் போராட்டம்

By

Published : Dec 18, 2020, 8:30 PM IST

மதுரை:மதுரை மாநகராட்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற இந்த பணியில் மதுரையை சேர்ந்த 300 இளைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

மாதத்திற்கு 8 ஆயிரம் ரூபாய் ஊதியம் என்கிற அடிப்படையில், 3 மாதங்களுக்கு ஒப்பந்த முறையில் இப்பணிகளில் இளைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இரண்டு மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்பட்டுவிட்டது. ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், நிலுவை ஊதியத்தை மாநகராட்சி நிர்வாகம் வழங்கவில்லை எனவும், மாநகராட்சி நிர்வாகத்திடம் இது குறித்து கேட்டபோது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாநகராட்சி ஆணையரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இதையும் படிங்க:தடையை மீறி எருது கட்டு திருவிழா... காவல்துறை வழக்குப் பதிவு

ABOUT THE AUTHOR

...view details