தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஊதிய ஒப்பந்தத்தை ஒரு கருவியாக போக்குவரத்து கழகங்கள் பயன்படுத்த முடியாது - நீதிமன்றம் - transport corporation

ஊதிய ஒப்பந்தத்தை ஒரு கருவியாக போக்குவரத்து கழகங்கள் பயன்படுத்த முடியாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

ஊதிய ஒப்பந்தத்தை ஒரு கருவியாக போக்குவரத்து கழகங்கள் பயன்படுத்த முடியாது - நீதிமன்றம்
ஊதிய ஒப்பந்தத்தை ஒரு கருவியாக போக்குவரத்து கழகங்கள் பயன்படுத்த முடியாது - நீதிமன்றம்

By

Published : Jun 23, 2021, 12:50 PM IST

மதுரை : மதுரையில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து ஏப்ரல் 2020-ல் ஓய்வு பெற்றவர் செந்தில். இவர் ஓய்வு பெறுவதற்கு 5 நாள்களுக்கு முன்பு, பணிக்காலத்தில் வழங்கப்பட்ட ஊதிய உயர்வு நிறுத்த தண்டனையை நிறைவேற்ற முடியாததால் அதற்காக ரூ.75,900 பணம் செலுத்த உத்தரவிடப்பட்டது.
பணம் செலுத்திய பிறகே பணி முடிவு நற்பயன் பிரிவுக்கு பணிப்பதிவேடு அனுப்பப்படும் என கூறப்பட்டதால் பணத்தை செலுத்தி செந்தில் ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், பணம் பிடித்தம் செய்யும் உத்தரவை ரத்து செய்யவும், செலுத்திய பணத்தை 18 % வட்டியுடன் திரும்ப வழங்கக்கோரி செந்தில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரரிடம் பிடித்தம் செய்த பணத்தை 4 வாரத்தில் திரும்ப வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு போக்குவரத்து கழக ஊதிய ஒப்பந்தத்தில் பணம் பிடித்தம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன்படியே பணம் பிடித்தம் செய்யப்பட்டது என போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஊதிய ஒப்பந்தத்தை ஒரு கருவியாக போக்குவரத்து கழகங்கள் பயன்படுத்த முடியாது என தெரிவித்தனர். எனவே பிடித்தம் செய்த பணத்தை 12 வாரங்களில் திரும்ப வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். தவறினால் 6 விழுக்காடு வட்டி வழங்க வேண்டும் என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details