திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த தீபக் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் மனுவில், "எனது ஊரில் உள்ள டீக்கடையில் நான் கொடுக்கவேண்டிய பாக்கி 160 ரூபாயை காரணம்காட்டி, எனக்கு டீ கொடுக்க மறுக்கப்பட்டதாகவும், அதனால் நான் ஆத்திரமடைந்து கத்தியை காட்டி அந்த கடையில் உள்ள பொருள்களை சேதப்படுத்தியதாகவும் என் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நான் கைது செய்யப்பட்டேன்.
கடனுக்கு டீ தர மறுத்த கடையை அடித்து உடைத்தவருக்கு நீதிமன்றம் வைத்த செக்
திருச்சியில் கடனுக்கு டீ தர மறுத்ததால் கடையை அடித்து உடைத்த நபருக்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த புகாரில் கூறியது போன்று நான் எந்த ஒரு தாக்குதலிலும் ஈடுபடவில்லை. எனவே எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி முரளி சங்கர் முன்பு நேற்று (ஏப். 19) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரர் தமிழ்நாடு முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.10,000 வழங்க வேண்டும். திருச்சி மாவட்டம் முசிறி காவல் நிலையத்தில் தினமும் காலை கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:மதுரை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் மீதான பாலியல் வழக்கு ரத்து