தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரவுடி நாகேந்திரனை சிகிச்சைக்கு அனுப்ப மறுத்து மிரட்டல்: அரசு, சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு

சென்னை: ரவுடி நாகேந்திரனை சிகிச்சைக்கு அனுப்ப மறுத்ததுடன், சிறைக்குள் மிரட்டல் விடுக்கும் கண்காணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கை கோரிய மனுவுக்கு தமிழக அரசு மற்றும் சிறைத்துறையும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MHC
MHC

By

Published : Oct 20, 2020, 11:44 AM IST

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி நாகேந்திரன். இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட நாகேந்திரனுக்கு சிறையில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017ஆம் ஆண்டு முதல் பல வழக்குகள் தொடரப்பட்டன.

பின்னர், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை அளிக்கப்பட்ட சிகிச்சையில், சிறுநீரக மாற்றம் செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த ஜனவரி மாதம் குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காக சென்றபோது, நாகேந்திரனின் உடல் எடை கூடியதால், சிறுநீரகத்தை பாதிக்கக்கூடும் என எச்சரித்த மருத்துவர்கள், ஏப்ரல் மாதம் சிகிச்சை அளிக்க தேதி குறித்துள்ளனர். ஆனால், அவரை ஏப்ரல் 6ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்க புழல் சிறை கண்காணிப்பாளர் மறுத்துள்ளார்.

இதனால் கணவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்க அனுமதிக்க கோரி நாகேந்திரன் மனைவி விசாலாட்சி மே 25, ஜூன் 10 ஆகிய தேதிகளில் சிறை கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

சிறைக்குள் மிரட்டல் இருப்பதாகவும், துப்பாக்கி முனையில் மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டி புழல் சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமாருக்கு எதிராக செப்டம்பர் 24ஆம் தேதி, உள்துறை செயலாளர், சிறைத்துறை கூடுதல் டிஜிபி ஆகியோரிடம் விசாலாட்சி புகார் மனு அனுப்பியிருந்தார்.

அந்த புகார் மீது உரிய முறையில் விசாரணை நடத்த டிஐஜி அந்தஸ்துக்கு குறையாத அலுவலரை நியமிக்க கோரி விசாலாட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக உள்துறை செயலாளர், சிறைத்துறை கூடுதல் டிஜிபி, புழல் சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details