தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

துணை தாசில்தார் வீட்டில் கொள்ளை - காவல் துறை வழக்குப்பதிவு

மதுரை: துணை தாசில்தார் வீட்டில் 65 சவரன் தங்க நகை, 25 கிலோ வெள்ளி, நாட்டு துப்பாக்கி, 20ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துணை தாசில்தார் வீட்டில் கொள்ளை - போலீஸார் வழக்குப் பதிவு
துணை தாசில்தார் வீட்டில் கொள்ளை - போலீஸார் வழக்குப் பதிவு

By

Published : Jan 18, 2021, 4:02 PM IST

மதுரை வானமாமலை நகர் ஷாலினி தெரு பகுதியில் வசித்து வருபவர் முன்னாள் துணை தாசில்தார் ரவீந்திரன் இவர் குடும்பத்துடன் கடந்த 15ஆம் தேதி ராஜபாளையத்திலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்று இன்று அதிகாலை வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது வீட்டிலிருந்த 65 பவுன் தங்க நகை, 25 கிலோ வெள்ளி பொருட்கள், 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் நாட்டு துப்பாக்கி ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்ததையடுத்து உடனடியாக சம்பந்தப்பட்ட எஸ் எஸ் காலனி காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தார்.

புகாரையடுத்து சம்பவ இடத்திற்கு துணை ஆணையர் பழனிக்குமார், ஆய்வாளர் சக்கரவர்த்தி, கைரேகை நிபுணர்கள் மோப்ப நாயுடன் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதி முழுவதும் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பொதுமக்களிடையே பெரும் அச்சமும், பீதியும் நிலவி வருகிறது.

இதையும் படிங்க:கத்தி முனையில் ரூ. 4 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்கள் கொள்ளை!

ABOUT THE AUTHOR

...view details