31ஆவது சாலை பாதுகாப்பு வார விழா தமிழ்நாடு முழுவதும் கடைப்பிடிக்கும் நிலையில், மதுரையில் காவல் துறை சார்பில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள், போக்குவரத்து பெண் காவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
மதுரை தமுக்கம் மைதானத்திலிருந்து நெல்பேட்டை அண்ணா சிலை வழியாக செயின்ட் ஜோசப் பள்ளி வழியாக கீழவாசல், தெற்கு வாசல், மதுரை திடீர் நகர் வழியாக பழங்காநத்தம் ஜெயம் திரையரங்கம் அருகில் நிறைவடைந்தது.
பேரணியில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளோடு பெண் காவலர்கள் இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணியை மேற்கொண்டனர்.
சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் வினய் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வில் காவல் துறை ஆணையர் டேவிட்சன் தேவாசிர்வாதம், சட்டம் ஒழுங்கு துணை காவல் ஆணையர் கார்த்திக், போக்குவரத்து துணைக்காவல் ஆணையர் சுகுமாரன் மற்றும் பல அலுவலர்கள் பங்கேற்றனர்.