தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கொள்ளிடம் மேம்பாலம் வழியே போக்குவரத்து - பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு - பதில் மனுதாக்கல்

கொள்ளிடம் ஆற்றின் உயர் மட்ட மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்க கோரிய வழக்கிற்கு பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

By

Published : Nov 2, 2021, 1:48 PM IST

மதுரை:தமிழ்நாடு தேசிய நெடுஞ்சாலைத்துறை செயலர் பதில் மனுத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு தஞ்சாவூரை சேர்ந்த ஜீவாகுமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர் மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலம் திருச்சி மற்றும் கும்பகோணம் இணைப்புப் பாலமாக அமைந்துள்ளது. இதனிடையில் திருவையாறு, சுவாமிமலை மற்றும் பாபநாசம் உள்ளது.

இந்தப் பாலம் தற்போது, செயல்பாட்டிற்கு வந்திருந்தாலும் சிறு வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இப்பாலம் மூலமாக, திருச்சி முதல் கும்பகோணம் வரை 76 கிலோ மீட்டரில் செல்ல முடியும். திருச்சியிலிருந்து சுவாமிமலை தஞ்சாவூர் வழியாக 93 கிலோ மீட்டரில் செல்ல முடியும்.

நெடுஞ்சாலைத்துறை - பதில் மனுத்தாக்கல்

கனரக வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கும் பட்சத்தில் விவசாய பொருட்களான நெல் காய்கறிகள் வேகமாக கொண்டு செல்வதற்கு உதவியாக இருக்கும். எனவே, கல்லணை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தை கனரக வாகனங்கள், நகரப் பேருந்துகள் ஆகியவை செல்ல அனுமதி அளிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து தமிழ்நாடு தேசிய நெடுஞ்சாலைத்துறை செயலர் மற்றும் திருச்சி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை டிசம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: கரோனா வைரஸை கொல்லும் இயந்திரம் - ஐஐடி பாட்னாவின் அரிய கண்டுபிடிப்பு!

ABOUT THE AUTHOR

...view details