தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், திமுக, அதிமுக, காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையை தொடங்கியுள்ளன. இதனிடையே, தேர்தலில் வாக்களிக்கும் இயந்திரங்கள் சரிபார்க்கும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் எதிரொலி: திருமங்கலத்தில் இருந்த வாக்கு இயந்திரங்கள் இடமாற்றம் - திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம்
மதுரை: தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் 2021ஆம் ஆண்டு நடைபெற இருப்பதையொட்டி, திருமங்கலம் தாலுக்கா அலுவலகத்தில் இருந்த வாக்கு இயந்திரங்கள், மதுரை மாநகராட்சி அரங்குக்கு கொண்டுச் செல்லப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட 310 வாக்குச்சாவடி மையங்களில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரம் (EVM), விவிபிஏடி இயந்திரங்கள் உள்ளிட்ட 310 இயந்திரங்கள் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி திருமங்கலம் தாலுக்கா அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த 310 வாக்கு இயந்திரங்கள், இரண்டு கண்டெய்னர் லாரிகள் மூலம் வருவாய்த் துறை அலுவலர்கள் முன்னிலையில், மதுரை மாநகராட்சி அரங்குக்கு கொண்டுச் செல்லப்பட்டன.