மதுரையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மேலக்கால். தேனூர், திருவேடகத்திற்கு இடையில் ஓடுகின்ற வைகை ஆற்றுக்குள் ஒவ்வொரு அமாவாசையன்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமை நாள்களிலும் மூத்தோருக்கு திதி கொடுத்தல், பில்லி சூனியம் உள்ளிட்ட பல்வேறு சடங்கு சம்பிரதாயங்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.
அசுத்தமாகும் வைகை
தொடர்புடைய நபர்களும் சடங்குகளை மேற்கொள்ளும் புரோகிதர்களும், வள்ளுவர்களும் தொடர்ந்து வைகை ஆற்றை சுத்தம்செய்கின்றனர் என தேனூர் சுழியம் இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவர் ஜெயக்குமார் புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கு அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகள் மூலமாகத்தான் குடி தண்ணீர் கொண்டுசெல்லப்படுகிறது. பெரும்பாலும் வைகை ஆற்றில் தண்ணீர் ஓடாதபோது இங்கு சடங்கு சம்பிரதாயங்கள் நிகழ்த்த வருகின்ற புரோகிதர்கள், அஸ்தி உள்ளிட்ட சம்பிரதாய பொருள்களை குடிதண்ணீர் கிணற்றின் உறையை திறந்து அதில் கொட்டிவிட்டுச் செல்கிறார்கள். வைகையாற்றின் உள்ளேயும் அசுத்தம் செய்கிறார்கள்" என்கிறார்.