தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆன்மாக்கள் எடப்பாடி பழனிசாமியிடமே தான் உள்ளது - ஆர்.பி.உதயகுமார் - AIADMK will go to the General Assembly

அதிமுகவின் பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, இத்தீர்ப்பின் மூலம் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மாக்கள் எடப்பாடி பழனிசாமியிடமே தான் உள்ளது எனத் தெளிவாகி உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 2, 2022, 9:10 PM IST

மதுரை:சென்னை உயர் நீதிமன்றம் அதிமுகவின் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து, இன்று (செப்.2) முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், 'இந்த தீர்ப்பு உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரிகிறது. கிளை தொடங்கி தலைமை வரை எடப்பாடியாருக்கு ஆதரவு உள்ளது. அதிமுகவின் பெருமைகளை கட்டிக்காக்க தொண்டர்கள் தயாராக உள்ளார்கள்.

இந்த தீர்ப்பின் மூலம் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆன்மாக்கள் எடப்பாடி பழனிசாமியிடமே உள்ளது என்பதைக் காட்டுகிறது. வருகிற எந்த தேர்தலாக இருந்தாலும் அதிமுக வெற்றியடையும். நியாயம், சத்தியம், தர்மம், உண்மைத்தொண்டர்கள் பக்கம் நின்று கிடைத்துள்ள மகத்தான தீர்ப்பு இது.

பொதுக்குழு, சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் என 99 விழுக்காடு பேர் எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் உள்ளனர். எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் செல்வாக்கை தெரிந்தும், தெரிந்து கொள்ளாமலும் இருப்பவர்களுக்கு காலம் தக்க பாடம் புகட்டும்' என்றார்.

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆன்மாக்கள் எடப்பாடி பழனிசாமியிடமே தான் உள்ளது - ஆர்.பி.உதயகுமார்

இது இறுதி தீர்ப்பா என்கிற செய்தியாளர்களின் கேள்விக்கு, 'கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை. இந்த தீர்ப்பு மூலம் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. அறிந்தும் அறியாததுபோல, தெரிந்தும் தெரியாததுபோல உள்ளவர்களை ஒன்றும் செய்ய முடியாது' என்றார்.

இதையும் படிங்க: உற்சாகத்தில் ஈபிஎஸ்..! மீண்டும் நீதிமன்றத்தின் கதவைத் தட்டும் ஓபிஎஸ்..! அதிமுகவில் நடக்கப்போவது என்ன?

ABOUT THE AUTHOR

...view details