முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு மதுரை சிறையில் சிறைவாசியாக உள்ள ரவிச்சந்திரன் 15 நாட்கள் சாதாரண விடுப்பில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில், துப்பாக்கி ஏந்திய காவலர்கள், சாதாரண உடையணிந்த காவலர்கள், பல்வேறு நுண்ணறிவுத் துறை பிரிவினரின் பாதுகாப்புடன் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனை இன்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
அதில், 'முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்டு 28 ஆண்டுகள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். நான் உள்ளிட்ட ஏழு பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வது என தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றி 16 மாதங்களாகிவிட்டன. மாநில அரசின் முடிவுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.