தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ராமேஸ்வரம் - செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை ஜுலை வரை நீட்டிப்பு - ராமேஸ்வரம் செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை ஜுலை வரை நீட்டிப்பு

ராமேஸ்வரம் செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவையை வருகின்ற ஜூலை மாதம் வரை நீட்டித்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை ஜுலை வரை நீட்டிப்பு
செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை ஜுலை வரை நீட்டிப்பு

By

Published : Mar 20, 2022, 1:27 PM IST

ராமேஸ்வரம் - செகந்திராபாத் விரைவு சிறப்பு ரயில் மார்ச் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதனுடைய சேவை ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ராமேஸ்வரம் செகந்திராபாத் விரைவு சிறப்பு ரயில் (07686) ராமேஸ்வரத்திலிருந்து ஏப்ரல் 7, 16, 21, 28 மே 5, 12, 19, 26 ஜூன் 2, 9, 16, 23, 30 ஜூலை 7, 14, 21, 28 ஆகிய வியாழக்கிழமைகளில் இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை காலை 07.10 மணிக்கு செகந்திராபாத் சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் செகந்திராபாத் - இராமேஸ்வரம் வாராந்திர விரைவு சிறப்பு (07685) ரயில் செகந்திராபாத்திலிருந்து ஏப்ரல் 5, 12, 19, 26 மே 3, 10, 17, 24, 31 ஜூன் 7, 14, 21, 28 ஜூலை 5, 12, 19, 26 ஆகிய செவ்வாய் கிழமைகளில் இரவு 09.25 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமைகளில் அதிகாலை 03.10 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.

இதையும் படிங்க:குண்டூர் ஜின்னா கோபுரம் பெயரை மாற்ற பாஜக கோரிக்கை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details