மதுரை:இது குறித்து மதுரை ரயில்வே கோட்டம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வண்டி எண் 07685 செகந்திராபாத் - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்புக் கட்டண ரயில் ஜனவரி 11, 18, 25 பிப்ரவரி 1, 8, 15, 22 மார்ச் 1, 8, 15, 22, 29 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் இரவு 9.25 மணிக்கு செகந்திராபாத்திலிருந்து புறப்பட்டு வியாழக்கிழமைகளில் அதிகாலை 3.10 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும்.
மறுமார்க்கத்தில் வண்டி எண் 07686 ராமேஸ்வரம் - செகந்திராபாத் வாராந்திர சிறப்பு கட்டண ரயில் ஜனவரி 13, 20, 22 பிப்ரவரி 3, 10, 17, 24 மார்ச் 3, 10, 17, 24, 31 ஆகிய வியாழக்கிழமைகளில் இரவு 11.55 மணிக்கு ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டு சனிக்கிழமைகளில் காலை 7.10 மணிக்கு செகந்திராபாத் சென்று சேரும்.
இந்த ரயில்கள் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூர், மிரியால்குடா, நலகொண்டா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:Rasi Palan: இன்றைய ராசிபலன் - டிசம்பர் 25