மதுரை: ராமாயண காவியத்தில் உள்ள நகரங்களை இணைத்து இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், ராமாயண காவிய சுற்றுலா சிறப்பு ரயிலை நவம்பர் மாதம் இயக்குகிறது.
இந்த சிறப்பு ரயில் மதுரையிலிருந்து நவம்பர் 16ஆம் தேதி செவ்வாய்க்கிழமை புறப்பட்டு திண்டுக்கல், திருச்சி, கும்பகோணம், கடலூர், விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக இயக்கப்படவுள்ளது.
இந்த ரயில் மூலம் ராமாயண காவியம் தொடர்புடைய நகரங்களான ஹம்பி, நாசிக், சித்திரக்கூடம், காசி, கயா, சீதா மார்ஹி, நேபாளம் ஜனக்புரியில் உள்ள சீதா ஜென்ம பூமி, அயோத்தியில் ராம ஜென்ம பூமி நந்திகிராம், சிருங்க வெற்பூர், அலகாபாத் போன்ற சரித்திரப் புகழ் வாய்ந்த இடங்களை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.