தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரமலான் திருநாள்: மதுரை தமுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் தொழுகை - ரமலான் திருநாள்

ரமலான் திருநாளை முன்னிட்டு பெருநாள் திடல் தொழுகை மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

மதுரை தமுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் தொழுகை
மதுரை தமுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் தொழுகை

By

Published : May 3, 2022, 2:09 PM IST

Updated : May 3, 2022, 6:56 PM IST

மதுரை:உலகம் முழுவதும் ரமலான் திருநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மதுரை தமுக்கம் மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரமலான் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. மதுரை மாவட்டம் முழுமைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் 24 இடங்களில் ரமலான் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் திடல் தொழுகை நடத்தப்பட்டது. மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற ரமலான் பெருநாள் திடல் தொழுகையில் மதுரை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் செயலாளர் அம்ஜத் கான் தலைமை ஏற்று தொழுகையை நடத்தி வைத்தார். திடல் தொழுகையில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர்.

மதுரை தமுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் தொழுகை

தொழுகை முடிந்த பின்னர் இஸ்லாமியர்கள் தங்கள் உறவுகளையும் நண்பர்களையும் ஆரத்தழுவி ரமலான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பின்னர் ஏழை, எளியவர்களுக்கு உதவிகளை செய்து ரமலான் பெருநாளை இஸ்லாமியர்கள் கொண்டாடினார்கள்.

இதையும் படிங்க:திருவள்ளூரில் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்து தெரிவித்த இஸ்லாமியர்கள்

Last Updated : May 3, 2022, 6:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details