தமிழ்நாட்டு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு:-
கேள்வி: கம்பம் பகுதியில் ரவீந்திரநாத் காரை மறித்து அவரைத் தாக்க முயற்சிகள் நடந்துள்ளதே?
பதில்: வன்முறையை கையில் எடுத்து அதிமுகவை அடக்க பார்த்தார்கள் என்றால் அது நடக்காது. அதிமுகவில் உள்ளவர்கள் கோழைகள் கிடையாது. ரவீந்திரநாத் எம்.பி. நினைத்திருந்தால் கீழே இறங்கி அடித்திருக்க முடியும். மத ரீதியான பிரச்னைகள் வரக்கூடாது, நம்மால் ஒரு சண்டை ஏற்பட்டு விடக்கூடாது என்பதால்தான் அமைதியாக இருந்திருப்பார்.
பிடிக்காத திட்டத்தை அரசு நிறைவேற்றுகிறது என்று யாரேனும் கருதினால் சட்டரீதியாக நீதிமன்றம் செல்ல வேண்டும். இல்லையென்றால் உணர்வுகளை நியாயப்படுத்தி காட்டவேண்டும். அதை விட்டுவிட்டு வண்டியை மறித்து அடிக்க முயற்சிப்பது எல்லாம் சரி கிடையாது. அந்த வழியை நாங்களும் பின்பற்ற முடியும் எங்களுக்கும் தெரியும்.
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரே அதிமுகவினரை கட்சியினரை தாக்குகின்றனர். அதிமுகவினர் வீரம் கொண்டு எழுந்தால் சிங்கமாக எழுவோம். நாங்கள் பயந்து ஓடும் நபர்கள் கிடையாது. நேரம் வந்தால் தக்க பதிலடி கொடுப்போம்.
கேள்வி: ரஜினி மீதான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதில் மத்திய அரசின் தலையீடு உள்ளதா?