தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

போஸ்டர் ஒட்ட மாட்டோம் என போஸ்டர் ஒட்டிய ரஜினி ரசிகர்கள் - நடிகர் ரஜினிகாந்த்

மதுரை: ரசிகர்களுக்கு போஸ்டர் ஒட்ட வேண்டாம் என ரஜினி சார்பில் கூறியிருந்தபோதும் போஸ்டரை இனிமேல் ஒட்ட மாட்டோம் என மதுரை ரஜினி ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

Rajini fans poster issue in Madurai district
Rajini fans poster issue in Madurai district

By

Published : Sep 12, 2020, 12:56 AM IST

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாள்களாகவே, 2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்காக பல கட்சியினரும் இப்போதே போஸ்டர் மூலம் தங்களின் பரப்புரையை ஆரம்பித்திருக்கின்றனர்.

இந்நிலையில், இன்றளவும் கட்சியே ஆரம்பிக்காத ரஜினி சார்பில், இனி ரசிகர்கள் யாரும் போஸ்டர் அடிக்க வேண்டாம் செப்டம்பர் 10ஆம் தேதி, அவரது தரப்பு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

இந்தச் சூழலில், ரஜினியின் ரசிகர்கள் அதற்கும் ஒரு போஸ்டர் அடித்துள்ளனர். அதில் ரசிகர்களுக்கு போஸ்டர் அடிக்க வேண்டாம் என்று தலைமை உத்தரவு ! தலைவா நீ எப்ப கட்சி தொடங்கினாலும் உங்களுக்குத்தான் மக்கள் ஆதரவு என வசனங்கள் எழுதப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details