தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முதலமைச்சர் குறித்து விஜய் பேசியிருந்தால் என்ன நடக்கும் தெரியுமா? ராஜன் செல்லப்பா விளக்கம் - vijay speech in bigil audio launch

மதுரை: பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் கூறிய கருத்துக்கு பல்வேறு விதமான உள்நோக்கங்களை மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா கற்பித்துள்ளார்.

Rajan sellappa MLA about vijay speech in bigil audio launch

By

Published : Sep 26, 2019, 11:06 PM IST

மதுரையில் அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்றது.

கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த ராஜன் செல்லப்பா, “மதிப்பிற்குரிய திரைப்பட நடிகர் விஜய் ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார். அதற்கான விமர்சனங்களுக்கு எங்கள் கட்சியின் நிர்வாகிகள் அமைச்சர்கள் பதிலளித்துள்ளனர். ஏற்கனவே சர்கார் படத்தில் ஜெயலலிதாவின் திட்டத்தை மாசுப்படுத்தி பேசியிருப்பதை நாங்கள் அமைதியான முறையில் எதிர்த்ததால் சில காட்சிகளை திரும்பப் பெற்றார்கள். ஆனால் தொடர்ந்து அவர் அதே நோக்கத்தோடு பேசியதற்கு எங்கள் அமைச்சர்கள் தக்க பதிலை கொடுத்துள்ளனர்.

ராஜன் செல்லப்பாவின் பேட்டி

யாரை எங்கே வைக்க வேண்டுமோ அங்கே உட்கார வைக்க வேண்டும் என்று விஜய கூறிய கருத்தைக் கொண்டு அவர் அதிமுக மற்றும் முதலமைச்சரை எதிர்க்கிறார் என சில பேர் நினைத்து கொண்டுள்ளனர். ஆனால் என்னை பொறுத்தவரை அப்படித் தெரியவில்லை.

அமெரிக்காவிலும் அவர் படத்தை வெளியிட்டு வருவதால், அதிபர் ட்ரம்பை குறிப்பிட்டுக்கூட அவர் பேசியிருக்கலாம். விஜய் ஒரு காலத்தில் திமுக ஆதரவாளராக இருந்து, தயாநிதி மாறனோடு இணைந்து டெல்லியில் பேட்டி கொடுத்திருக்கிறார். எனவே திமுக ஆதரவையோ அல்லது பதவியையோ எதிர்பார்த்து அவ்வாறு பேசியிருக்கலாம்.

ராஜன் செல்லப்பாவின் பேட்டி

ஸ்டாலின் மகன் உதயநிதியை இளைஞரணி பொறுப்பில் அமர வைத்ததைத்தான் விஜய் மறைமுகமாக விமர்சித்துள்ளார். ஒருவேளை இந்திய பிரதமரை குறிப்பிட்டு கூறியிருந்தால் அவருக்கு ஆபத்து காத்திருக்கிறது என்று அர்த்தம். தமிழ்நாடு முதலமைச்சரை குறிப்பிட்டு பேசிருந்தால் 50 நாட்கள் ஓட வேண்டிய படம் 25 நாட்கள் மட்டும்தான் ஓடும். நான்கு நாட்கள் மட்டுமே விஜய்யின் ரசிகர்கள் அவர் படத்திற்கு ஆர்ப்பாட்டம் செய்வார்கள். ஐந்தாவது நாள் யாரும் இருக்க மாட்டார்கள். அதனால் விஜய்யின் படம் பிகில் பிகிலாகத்தான் ஆகும்.

நல்லாட்சி வழங்கும் முதலமைச்சரை விமர்சனம் செய்து பேசினால் விஜய்யின் படத்திற்குதான் வசூல் குறையும். படத்திற்கு வசூல் குறைந்தால் அரசுக்கு வருமானமும் குறையும். ஆகவே விஜய் அவருடைய திரைப்பட பணியை மட்டும் பார்ப்பது நல்லது. வரலாற்றில் பாக்யராஜ், டி.ராஜேந்தர், கமல் முதற்கொண்டு எல்லா நடிகர்களுடைய கட்சியும் எங்கே போய் எப்படி இருக்கிறதென்று எல்லோருக்கும் தெரியும். இனி புதிதாக கட்சி தொடங்கும் நடிகர்களின் கட்சிகள் இரண்டு மூன்று விழுக்காடு மட்டுமே வாங்க வாய்ப்புண்டு. தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிமுக திமுகவுக்குமே எப்போதும் போட்டி” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details