தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திரெளபதி முர்முவின் வெற்றி திமுகவின் தோல்வியாக அமையும் - ராஜன் செல்லப்பா - குடியரசு தலைவர் தேர்தல்

வரும் குடியரசு தலைவர் தேர்தலில் திரெளபதி முர்முவின் வெற்றி திமுகவுக்கு கிடைக்கும் மிகப்பெரிய தோல்வி என்றும் அதிமுக பொதுக்குழு மனநிறைவோடு சிறப்பாக நடைபெறும் என்றும் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

ராஜன் செல்லப்பா எம்எல்ஏ
ராஜன் செல்லப்பா எம்எல்ஏ

By

Published : Jul 7, 2022, 2:27 PM IST

மதுரை: விளாச்சேரியில் உள்ள தமிழறிஞர் பரிதிமாற்கலைஞரின் நினைவு இல்லத்தில் அவரது 152ஆவது பிறந்த நாளையொட்டி, மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் அரசு சார்பில் நேற்று (ஜூலை6) அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கோ. தளபதி, எதிர்க்கட்சி சார்பில் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன்செல்லப்பா ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன்செல்லப்பா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், “அதிமுக பொதுக்குழு மனநிறைவோடு சிறப்பாக நடைபெறும்.

நிச்சயம் எல்லாம் நல்லதே நடக்கும்' என்றார். மேலும் அவர் கூறுகையில், 'அதிமுக 2019 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தது. அதே போல், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்தோம். உள்ளாட்சித் தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம்.

எம்ஜிஆர் படங்களில் 3 முறை அடி வாங்குவார். அதன் பின் 4ஆவது முறை திருப்பி அடிப்பார். அதுபோல, வருகின்ற 18ஆம் தேதி அதிமுக ஆதரவோடு பழங்குடியின பெண் திரெளபதி முர்மு மிகப்பெரிய வெற்றியை பெறவுள்ளார். இது அதிமுகவுக்கு கிடைக்கும் மிகப்பெரிய வெற்றி. திமுகவுக்கு கிடைக்கு மிகப்பெரிய தோல்வியாக அமையும்.

இந்த மூன்றாண்டு காலங்களில் திமுகவுக்கு கிடைக்கும் மிகப்பெரிய தோல்வி. திரெளபதி முர்முவின் வெற்றி அதிமுகவுக்கு முதல் அடித்தளம். தொடர்ந்து அதிமுக வெற்றியை பெறும்' என்றார்.

செய்தியாளர்களைச் சந்தித்த ராஜன் செல்லப்பா

இதையும் படிங்க: நான் செயல் தலைவராவது குறித்து கேப்டன்தான் முடிவெடுக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்

ABOUT THE AUTHOR

...view details