தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'மதுரை-புனலூர் ரயில் டிச.4 முதல் எக்ஸ்பிரஸாக மாற்றம்' - தென்னக ரயில்வே! - southern railway

மதுரை-புனலூர் ரயில் வரும் டிச.4ஆம் தேதி முதல் எக்ஸ்பிரஸாக இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

மதுரை-புனலூர் ரயில்
மதுரை-புனலூர் ரயில்

By

Published : Nov 30, 2020, 6:37 PM IST

இதுகுறித்து தென்னக ரயில்வே, "திருச்செந்தூரிலிருந்து மதுரை வழியாக சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் மற்றும் மதுரையிலிருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் வழியாக கேரள மாநிலம் புனலூர் வரை இயக்கப்படும் பயணிகள் ரயில் ஆகியவை ஊரடங்கு காரணமாக ஏழு மாதங்களுக்கும் மேல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்த இரண்டு ரயில்களும் வரும் டிச.4ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும். அதில், பயணிகள் ரயிலாக இயக்கப்பட்டு வந்த மதுரை-புனலூர் ரயில் டிசம்பர் 4ஆம் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 8 மாதங்களுக்குப்பின் இயங்கும் நீலகிரி மலை ரயில்!

ABOUT THE AUTHOR

...view details