மதுரை: புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த யூனுஸ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் விவசாயம் சார்ந்த மாவட்டமாகும்.
ஆவுடையார்கோயில் தாலுகா, பொய்யாதநல்லூர் கிராம மக்கள் பாலாற்றின் வரும் தண்ணீரை வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். சிலர் பாலாற்றில் ஆக்கிரமிப்பு செய்து மணலை கொட்டி மேடாக்கி உள்ளனர்.
பாலாற்றில் வீட்டு மனைகள்
இதனால், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் நீர் முழுவதும் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்கள் பெருமளவு சேதம் அடையும். மேலும், பொய்யாதநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சிலர் பாலாற்றில் ஆக்கிரமிப்பு செய்து, வீட்டு மனைகளாக மாற்றி வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், பொதுமக்கள் பெரும் பாதிப்பிள்ளாகி உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.