மதுரை:தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று (மே 23) தனது ட்விட்டர் பக்கத்தில், "எந்தளவு எனது முன்னோர்களால், அடையாளம் தெரியாத நாடுகளில் கல்வி, உழைப்பு ஆகியவற்றால் முன்னேறினேன் என சுயமரியாதை கொள்கிறேனோ, அதைவிட முக்கியமானதாக கருதுவது எனது பாரம்பரியத்தால் பெற்ற பாடம்,& தெளிவு - பணம், பதவி, அந்தஸ்து எல்லாம் தற்காலிகம்.
குணம், கொள்கை, சமூக பற்றுதான் மனிதனின் அடையாளமும், அழகும்" எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், அத்துடன் அவர் வெளியிட்டுள்ள ஒரு காணொலியில், தனது தந்தையார் அரசியலில் கடைப்பிடித்த நேர்மை, அவர் பணியாற்றிய முறை போன்ற அசாத்திய குணத்திற்குச் சான்று, அவரது இறுதி ஊர்வலத்தின்போது வீட்டிலிருந்து தத்தனேரி இடுகாடு வரை சுமார் 2 லட்சம் பொதுமக்கள் திரண்டு இருந்து அஞ்சலி செலுத்திய நிகழ்வுதான். அதுதான் தனக்கு வாழ்க்கையில் கிடைத்த பாடமாகவும் திருப்புமுனையாகவும் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.