தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதுரை மத்திய சிறையில் கைதி தூக்கிட்டுத் தற்கொலை - Prisoner who smuggled cannabis commits suicide in jail

மதுரை: மத்திய சிறையில் கைதி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

Prisoner who smuggled cannabis commits suicide in jail
Prisoner who smuggled cannabis commits suicide in jail

By

Published : Dec 4, 2020, 2:14 PM IST

மதுரை மத்திய சிறையில் தண்டனை கைதியாக திண்டுக்கல் மாவட்டம் கோவிந்தா புரத்தைச் சேர்ந்த பரணி என்பவர் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் வடமதுரை அருகே தங்கம்மாபட்டி சோதனைச்சாவடியில் 300 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் தண்டனை அனுபவித்துவருகிறார்.

இந்நிலையில் இன்று சிறைச்சாலையின் கழிவறையில் கைலியை கழுத்தில் மாட்டி தூக்கிட்டுக் கொண்டார். இதைப் பார்த்த சிறைக் காவலர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு இராசாசி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர்.

இதனை அடுத்து சிறை அலுவலர் இளங்கோ கொடுத்த புகாரின்பேரில் மதுரை கரிமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details