மதுரை:தமிழ்நாட்டில் புதிய 11 மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைத் திறந்துவைக்க நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி 2022 ஜனவரி 12 அன்று விருதுநகர் வருகைதருகிறார். அவருக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கவுள்ளனர்.
இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக டெல்லியிலிருந்து புறப்படும் நரேந்திர மோடி மதுரை விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து சாலை வழியாக விருதுநகர் செல்கிறார். இதற்காக காவல் துறையின் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது.