துபாயிலிருந்து மூவரும், சிங்கப்பூரிலிருந்து ஒருவரும் நேற்று தாயகம் திரும்பினர். அதன்படி அவர்கள் டெல்லி விமான நிலையம் வந்தடைந்து பின்னர் அங்கிருந்து மதுரை விமான நிலையம் வந்தனர். இந்த நான்கு பேருக்கும் மதுரை விமான நிலையத்தில் கைகளில் சீல்வைக்கப்பட்டனர். பின்னர், இவர்கள் சின்ன உடைப்பு அரசு மருத்துவ முகாமுக்கு 14 நாள்கள் கண்காணிப்பில் இருக்க அனுப்பிவைக்கப்பட்டனர்.
தற்போதுவரை வெளிநாட்டிலிருந்து வந்த பயணிகளில் மொத்தமாக ஒன்பது நபர்கள் சின்ன உடைப்பு மருத்துவ முகாமில் தங்கியுள்ளனர்.