தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பொங்கல் பை திட்டத்தில் நெய் பாக்கெட் தயாரிக்கும் பணி - சுறுசுறுப்புடன் இயங்கும் மதுரை ஆவின் நிர்வாகம் - மதுரை ஆவின் நிர்வாகம்

தமிழ்நாடு அரசின் பொங்கல் பை திட்டத்தின் கீழ், மாநிலத்தின் 9 மாவட்டங்களிலுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நெய் பாக்கெட் வழங்கும் பணி மதுரை ஆவின் நிர்வாகத்தின் வாயிலாக வழங்கப்படவுள்ளது. இதனையடுத்து அங்கு பாக்கெட் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

pongal bag ghee aavin madurai
pongal bag ghee aavin madurai

By

Published : Dec 22, 2020, 7:10 AM IST

மதுரை:திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை மாவட்டங்களுக்கு 2 லட்சத்து 52 ஆயிரம் 100 மி.லி. நெய் குப்பிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்திற்கு 5,145 கிலோ என, 51 ஆயிரத்து 450 குப்பிகளாகவும், தேனி மாவட்டத்திற்கு 2,736.1 கிலோ என, 27 ஆயிரத்து 361 குப்பிகளாகவும், திருநெல்வேலிக்கு 3,436 கிலோ என, 34 ஆயிரத்து 360 குப்பிகளாகவும், தூத்துக்குடிக்கு 2,373.5 கிலோ என, 23 ஆயிரத்து 735 குப்பிகளாகவும், கடலூருக்கு 4,085.8 கிலோ என, 40 ஆயிரத்து 848 குப்பிகளாகவும், நாகப்பட்டினத்திற்கு1,798.7 கிலோ என, 17 ஆயிரத்து 987 குப்பிகளாகவும், தஞ்சாவூருக்கு 876.8 கிலோ என, 8 ஆயிரத்து 768 குப்பிகளாகவும், திருவாரூருக்கு 771 கிலோ என, 7 ஆயிரத்து 710 குப்பிகளாகவும், மதுரைக்கு 3,985.5 கிலோ என, 39 ஆயிரத்து 855 குப்பிகளாகவும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

நெய் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஆவின் பணியாளர்கள்

தற்போது வரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் குப்பிகள் தயாரிக்கப்பட்டு கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு 75 ஆயிரத்து 313 நெய் குப்பிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், எஞ்சிய 87 ஆயிரத்து 74 நெய் குப்பிகள் தயாரிக்கும் பணி விரைவுப்படுத்தப்பட்டு, இரவு பகலாக மதுரை ஆவினில் நடைபெற்று வருகிறது. ஓரிரு நாட்களுக்குள் எஞ்சியுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் நெய் வழங்கப்பட்டு விடுமென ஆவின் நிர்வாகம் கூறியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details