மதுரைமாநகர் உத்தங்குடி அருகே பழமையான உள்ள ஊரணியில் இருந்த ஏராளமான மீன்கள் திடீரென மர்மமான முறையில் செத்து மிதந்தன. இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு மேற்கொண்டு நீரை பரிசோதனை செய்தனர்.
உயிரிழந்து மிதக்கும் மீன்கள் - காரணம் குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு மேலும் ஊரணியில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஊரணியில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் சென்றுவிடாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி ஊழியர்கள் மூலம் எச்சரிக்கை பலகை வைத்து பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
மீன் வளத்துறை அதிகாரிகள் ஆய்வு இந்த ஊரணியில் நேற்று முன்தினம் கோரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவர் மூழ்கி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் தற்போது மீன்கள் செத்து மிதப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவரின் உயிரிழப்பு குறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
தற்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை தேரோட்டம்.... ஏற்பாடுகள் தீவிரம்