தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை! - வைகோ தேவர் சிலைக்கு மரியாதை

மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 112ஆவது குருபூஜையை முன்னிட்டு கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அரசியல் தலைவர்கள் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அரசியல் தலைவர்கள் மரியாதை

By

Published : Oct 30, 2019, 12:36 PM IST

Updated : Oct 30, 2019, 1:12 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 30ஆம் தேதி ஆண்டுதோறும் தேவர் ஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப்படும். பசும்பொன்னில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர்.

கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு மரியாதை

முன்னதாக மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். இதேபோல் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திமுக முன்னாள் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மதிமுக நிர்வாகிகள், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதகிருஷ்ணன், பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Last Updated : Oct 30, 2019, 1:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details