தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பல்! - சுற்றி வளைத்த காவல்துறை! - பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கல்

மதுரை: கூடல் நகர் அருகே பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பலை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

arrest
arrest

By

Published : Jan 18, 2021, 3:54 PM IST

மதுரை கூடல் நகரிலுள்ள அசோக் நகர் மூன்றாவது தெருவில், சந்தேகப்படும் படியாக கும்பல் ஒன்று பதுங்கியிருப்பதாக, கூடல்புதூர் காவல் உதவி ஆய்வாளர் அழகுமுத்துவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர் உடனடியாக காவலர்களுடன் அப்பகுதிக்கு விரைந்து சென்றார். பின்னர் அக்கும்பல் தங்கியிருந்த வீட்டை காவல்துறையினர் சுற்றி வளைத்தனர்.

அப்போது, அங்கிருந்த ஆனையூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (20), அருண் பாண்டி என்ற கௌதம் (21), விளாங்குடி கரிசல் குளத்தை சேர்ந்த பாரதி (20), தர்மராஜ் (25) ஆகிய 4 பேரை, அவர்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களுடன் காவல்துறையினர் கைது செய்தனர்.

மற்றொருவரான கரிசல் குளத்தை சேர்ந்த வேட்டையன் என்ற அய்யங்காளை அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அக்கும்பல் எதற்காக, என்ன நோக்கத்துடன் ஆயுதங்களுடன் அங்கு தங்கியிருந்தது குறித்து காவல்துறையினர் பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பெண்ணிடம் பாலியல் வன்புணர்வு முயற்சி: காவல் துறை விசாரணை

ABOUT THE AUTHOR

...view details