தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அலைமோதும் பார்வையாளர்கள்; காவல் துறை கட்டுப்பாட்டில் கீழடி...! - keezhadi latest news

மதுரை: கீழடி ஐந்தாம் கட்ட அகழாய்வின் நிறைவுப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் நாளுக்கு நாள் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், காவல் துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கீழடியில் அலைமோதும் பார்வையாளர்கள்

By

Published : Oct 3, 2019, 3:21 PM IST

தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பாக கீழடியில் தற்போது ஐந்தாம் கட்ட அகழாய்வு நிறைவுப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் அந்த இடத்தை பார்வையிடுவதற்காக நாள்தோறும் பார்வையாளர்கள் ஆயிரக்கணக்கில் வந்தவண்ணம் உள்ளனர். கூட்ட நெரிசல் காரணமாக தற்போது சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரோஹித் நாதன், கீழடியைக் காணவரும் பார்வையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கீழடியில் அலைமோதும் பார்வையாளர்கள்

அகழாய்வுப் பணிகள் நடைபெறும் முன்புற பகுதியிலுள்ள 32 குழிகளை மட்டுமே, பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள்புறம் மற்றொரு பகுதிகளில் நடைபெறும் 22 குழிகளைப் பார்வையிடப் பார்வையாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று 30 நிமிடங்களுக்கு 100 பேர் வீதம் மட்டுமே பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், கீழடியில் பாதுகாப்புப் பணியில் மட்டும் 20 காவல் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details