மதுரை:பைபாஸ் சாலை வேல்முருகன் நகர் பகுதியில் கனகராஜ் - தங்கமாரி தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
இவர்கள் மதுரை ரயில் நிலையத்திற்கு அருகேவுள்ள குட்செட் தெருவில் டீக்கடை நடத்த ஞானகுரு என்பவரிடம் 2 லட்சம் ரூபாய் வரை முன்பணம் கொடுத்து, அவரிடமிருந்து கடையை வாடகைக்கு பெற்றுள்ளனர்.
ஆனால், அந்தக் கடையின் மூலம் போதிய வருமானம் இல்லாததால் தம்பதியினர் கடையை காலிசெய்வதாகவும், ஞானகுருவிடம் கொடுத்த முன் பணத்தை திருப்பி கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து நேற்று (டிச.27) தம்பதியினர் வீட்டுக்கு வந்து ஞானகுரு பணம் தருவது போன்று தந்துவிட்டு ஆதாரமாக செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்ட பின்னர், ஞானகுருவுடன் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் தம்பதியினரை மிரட்டி பணத்தைப் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
தம்பதியை மிரட்டி பணம் பறிப்பு இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட தம்பதி இது குறித்து மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:RATION RICE SEIZED: கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல்